2025 ஜூலை 17, வியாழக்கிழமை

வவுனியா அபிவிருத்திக்குழு கூட்டம்

Suganthini Ratnam   / 2014 ஓகஸ்ட் 04 , மு.ப. 10:47 - 0     - {{hitsCtrl.values.hits}}


-நவரத்தினம் கபில்நாத்


வவுனியா மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டம் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இன்று  திங்கட்கிழமை (4) நடைபெற்றது.

வவுனியா அபிவிருத்திக் குழுவின் இணைத் தலைவர் அமைச்சர் ரிசாட் பதியுதீன் மற்றும்; வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தலைமையில் இந்தக் கூட்டம் நடைபெற்றது.

வவுனியா மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்திகள், அதற்கு செலவிடப்பட்ட நிதி விடயங்கள்,  எதிர்காலத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய அபிவிருத்திகள் மற்றும்  மக்களின் தேவைகள் தொடர்பில் இங்கு  ஆராயப்பட்டன.

இந்தக் கூட்டத்தில் வன்னி நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், சிவசக்தி ஆனந்தன், வினோ நோகாரலிங்கம், வடமாகாண அமைச்சர்களான வைத்திய கலாநிதி ப.சத்தியலிங்கம், குருகுலராஜா, ஐங்கரநேசன், பா.டெனிஸ்வரன்,  வவுனியா அரசாங்க அதிபர் பந்துல ஹரிச்சந்திர. பிரதேச செயலாளாகள் உட்பட திணைக்கள தலைவர்கள் பலரும் கலந்துகொண்டனர்.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X