2025 ஜூலை 17, வியாழக்கிழமை

அரசியல் யாப்பிற்கு முரணாக இராணுவம் நில ஆக்கிரமிப்பு செய்கிறது: சிவமோகன்

Gavitha   / 2014 ஓகஸ்ட் 04 , பி.ப. 02:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நவரத்தினம் கபில்நாத்

அரசியல் யாப்பிற்கு முரணாக இராணுவம் நில ஆக்கிரமிப்பு செய்து வருவதாக வட மாகாண உறுப்பினர் வைத்தியகலாநிதி சி. சிவமோகன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் இன்று திங்கட்கிழமை (04) வெளியிட்டுள்ள அறிக்கையொன்றிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

சில நாட்களாக பெருந்தொகையான இராணுவ விஸ்தரிப்பு நடவடிக்கைகள் நாயாறு பிரதேசத்தில் தொடங்கியுள்ளதாக பொதுமக்கள் கவலையுடன் தெரிவிக்கின்றார்கள்.

நாயாறு பாலத்துடன் அண்டிய பிரதேசத்தில் ஒரு மேலதிக இராணுவ முகாம் அமைக்கும் வேலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. மக்கள் சமாதானத்தையும் இன நல்லிணக்கத்தையும் எதிர்பார்த்து காத்திருக்கும் போதும் மேலதிக இராணுவ முகாம் அமைக்கும் பணிகளில் அரசு ஈடுபட்டுள்ளது.

மேற்படி காணிகள் ஏற்கெனவே இப்பிரதேசத்தில் வசித்த பெருமளவு தமிழ்மக்களுக்கும் ஒரு சில சிங்கள குடும்பங்களுக்கும்  அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்ட காணிகளாகும்.

இதுவரை காலமும் இராணுவம் எமது மக்களை போகவிடாது தடுத்துவிட்டு இன்று தமது ஆக்கிரமிப்பில் ஈடுபடுவதை எவ்விதத்திலும் அனுமதிக்கமுடியாது.

மக்களை இராணுவ ஆக்கிரமிப்பிற்கு ஊக்குவிக்கும் இந்த அரசுடன் எப்படி இனநல்லிணக்கத்தை பற்றி பேசுவது?

எமது முதலமைச்சர் வட மாகாண காணி அமைச்சராக உள்ள போது அரசியல் யாப்பின் படி, அவரின் ஊடாக மத்திய அரசுக்கு செய்யப்படும் காணிகள் மட்டுமே இராணுவம் தனது தேவைக்கு பாவிக்கமுடியும். அப்படியிருக்க அடாவடித்தனமாக காணி அபகரிப்பில் ஈடுபடும் இராணுவத்தை கண்டிக்கின்றேன் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X