2025 ஜூலை 17, வியாழக்கிழமை

இராணுவத் தேவைகளுக்கு காணிகளை சுவீகரிக்க அனுமதிக்க முடியாது : சி.வி

George   / 2014 ஓகஸ்ட் 05 , மு.ப. 11:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நவரத்தினம் கபில்நாத்

பொது தேவைகளுக்கு காணிகள் சுவீகரிப்பதாக வெளிப்படுத்தி இராணுவ தேவைகளுக்கு காணிகளை சுவீகரிக்க முடியாது. அதற்கு அனுமதிக்கவும் முடியாது என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

வவுனியா மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் நேற்று ஞாயிற்றுக்கிழமை (04) மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற போது வர்த்தக கைத்தொழில் அமைச்சர் ரிசாட் பதியுதீன் அவர்களுடன் இணைத்தலைவராக கலந்து கொண்டு இராணுவத்தின் நில அபகரிப்பு தொடாடபாக கலந்துரையாடும் பேதே அவர் இதனைத் தெரிவித்தார்.

வவுனியா, ஓமந்தை இறம்பைக்குளம் பகுதியில் பொதுமக்களுடைய காணிகள் பொதுத்தேவைக்கு எனக் கூறி இராணுவத்தால் சுவீகரிக்கப்படவுள்ளது. இதற்கு விளம்பரமும்; ஒட்டப்பட்டுள்ளது. இது தவிர வவுனியாவின் மூன்று முறிப்பு, செட்டிகுளம் என பல பகுதிகளில் இராணுவத்தினர் மக்களின் காணிகளை சுவீகரிக்கின்றனர் என வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்தார்.

இதன் போது சுவீகரிக்கப்படும் காணி விபரங்களை காணி உத்தியோகத்தரிடம் கோரிய முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், பொதுத் தேவை என்னும் பெயரில் இராணுவத்திற்கு காணி சுவீகரிக்க முடியாது. அதுவும் மக்களின் காணிகளை வழங்க முடியாது. யுத்தம் முடிவடைந்து சிவில் நிர்வாகம் வந்துள்ளது. இதன் பின் ஏன் இராணுவம். அவர்கள் இங்கே இருக்கத் தேவையில்லை. அவர்கள் போகலாம் எனத் தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X