2025 ஜூலை 17, வியாழக்கிழமை

மான் வேட்டையாடியவர்களுக்குத் தண்டம்

Gavitha   / 2014 ஓகஸ்ட் 06 , பி.ப. 01:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சிப் பூநகரிப் பகுதியில் சட்டவிரோதமாக மான் வேட்டையாடிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட நால்வருக்கும் தலா 25,000 ரூபாய் தண்டம் விதித்து கிளிநொச்சி நீதவான் நீதிமன்ற நீதவான் எம்.ஐ.வகாப்தீன் புதன்கிழமை (06) உத்தரவிட்டார்.

மேற்படி நான்கு நபர்களும் கடந்த மாதம் 30ஆம் திகதி பூநகரிப் பகுதியில் மான் வேட்டையாடிக் கொண்டிருந்த போது, பூநகரிப் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு, மறுநாள் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டனர்.

ஆஜர்செய்யப்பட்டவர்களை நீதவான் இன்று புதன்கிழமை (06) வரையில் விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டிருந்தார்.

இந்நிலையில், மேற்படி வழக்கு இன்று புதன்கிழமை (06) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, குற்றவாளிகளின் குற்றப்பத்திரிகை வாசிக்கப்பட்டது. இதன்போது நால்வரும் தங்கள் குற்றங்களை ஒப்புக்கொண்டனர்.
இதனையடுத்தே நால்வருக்கும் தண்டம் விதித்து நீதவான் தீர்ப்பளித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X