2025 ஜூலை 17, வியாழக்கிழமை

வைத்திய நிபுணர்களுக்கான புதிய விடுதி திறப்பு

Suganthini Ratnam   / 2014 ஓகஸ்ட் 08 , மு.ப. 10:26 - 0     - {{hitsCtrl.values.hits}}


-நவரத்தினம் கபில்நாத்


வவுனியா வைத்தியசாலை வளாகத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட 03 மாடிகளைக் கொண்ட வைத்திய நிபுணர்களுக்கான விடுதி இன்று வெள்ளிக்கிழமை வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனால் திறந்துவைக்கப்பட்டது.

வடமாகாண சபையால் குறித்தொதுக்கப்பட்ட 22 மில்லியன் ரூபாய் நிதியில் இந்த விடுதிக் கட்டடம் நிர்மாணிக்கப்பட்டு, வவுனியா வைத்தியாசலையிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது.

வடமாகாணசபை உறுப்பினர் ம.தியாகராஜா தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில்  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி  நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், வடமாகாண சுகாதார அமைச்சர் ப.சந்தியலிங்கம், வடமாகாணசபை உறுப்பினர் இ.இந்திரராஜா, வைத்தியசாலைப் பணிப்பாளர் வைத்தியக் கலாநிதி கு.அகிலேந்திரன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இதேவேளை, வவுனியா பாலமோட்டை பகுதியில் கிராமிய வைத்தியசாலைக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்விலும் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் உள்ளிட்ட  குழுவினர் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X