2025 ஜூலை 17, வியாழக்கிழமை

அம்மாவை தேடித்தருமாறு ஆணைக்குழுவில் மகன் முறைப்பாடு

Kanagaraj   / 2014 ஓகஸ்ட் 09 , பி.ப. 12:00 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.றொசேரியன் லெம்பேட்

மன்னார் சவிரிக்குளம் பள்ளமடு பகுதியைச் சேர்ந்த செல்வரட்ணம் யோகேஸ்வரம் என்பவர் காணாமல் போன தனது அம்மா தொடர்பாக நேற்று வெள்ளிக்கிழமை(8) காணாமற்போனோர் தொடர்பான முறைப்பாடுகளை விசாரனை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவிடம் முறையிட்டார்.

அவர் தனது முறைப்பாட்டில் மேலும் தெரிவிக்கையில்...

காணாமல் போன அம்மா எங்களுடனே இருந்தார். இராணுவம் எங்கள் பகுதிக்குள் ஊடுறுவிய போது எங்கே போவது என்றுத் தெரியாது இறுதியில் முள்ளிவாய்க்கால் பகுதியை நோக்கி புறப்பட்டுச் சென்றோம்.

அங்கே கடற்கரை பகுதியொன்றில் கூடாரம் அடித்து இருந்தோம். அங்கு எவரும் முகாம் அமைத்து தரவும் இல்லை அத்துடன் உணவும் வழங்கவில்லை.

நாங்கள் இந்த இடத்துக்கு இடம்பெயர்வதற்கு முன் கிளிநொச்சியில் இருந்தோம்.அங்கே எங்கள் சொந்தம் மட்டுமல்ல வேறு பல ஆட்களும் எங்களுடன் இருந்தார்கள்.

செல்லுக்கு பயந்து தான் நாங்கள் முள்ளிவாய்க்காலுக்கு போகவேண்டிய நிலை ஏற்பட்டது. அப்பொழுது இது விடுதலைப் புலியின் கட்டுப்பாட்டில்தான் இருந்தது.

அந்நேரம் அப்பகுதியில் போக்குவரத்துக்கு கஷ்டமாக இருந்தது. அத்துடன் கிளிநொச்சியிலிருந்து  நாங்கள் புறப்பட்ட போது இயக்கம் எங்களை போக வேண்டாம் என தடுத்தது.

அதாவது இரானுவ கட்டுப்பாட்டு பகுதிக்குள் போக வேண்டாம் என்றே தடுத்தது.முள்ளிவாய்க்கால்  அப்பொழுது இயக்க கட்டுப்பாட்டுக்குள் தான் இருந்தது. இருந்தும் இரு பக்கங்களிலிருந்தும் எங்கள் பகுதிக்கு செல் வீச்சுக்கள் இடம் பெற்றன.

இதனால் நாங்கள் தடுமாறிக் கொணடு ஓடத்தொடங்கினோம். இந்த நேரத்தில் அம்மாவை தவரவிட்டுவிட்டோம். நாங்கள் போன பக்கம் சுமார் ஆயிரம் சடலங்களை கண்டிருப்போம்.

எனது அம்மா காணாமல் போனபோது அம்மாவுக்கு வயது 55 ஆகும். அப்பொழுது முள்ளிவாய்க்காள் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுக்குள்ளும் வட்டுவான் பகுதி இரானுவக்கட்டுப்பாட்டிலும் இருக்க காணப்பட்டது.

வுட்டுவான் பகுதியிலிருந்து செட்டிக்குளப் பகுதிக்கு இரானுவம் எங்களை அழைத்தச் சென்றது. முள்ளிவாய்க்காலில் கண்ட அம்மாதான் அதன்பின் அம்மாவைக் காணவே இல்லை.

அம்மாவை இரானுவம் கூட்டிச் சென்றதாக கண்டவர்கள் எங்களுக்கு சொன்னார்கள். காணாமல் போன அம்மாவைப்பற்றி ஐ.சீ.ஆர்.சீ யிடம்  முறையீடு செய்திருந்தேன் என்று முறையீடு செய்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X