2025 ஜூலை 18, வெள்ளிக்கிழமை

மனைவியை கத்தியால் குத்திவிட்டு கணவன் தலைமறைவு

Kanagaraj   / 2014 ஓகஸ்ட் 09 , பி.ப. 12:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நவரத்தினமம் கபில்நாத்

குடும்ப தகராறு காரணமாக தனது மனைவியை கத்தியால் குத்திய அவரது கணவன் தலைமறைவாகியுள்ளதாக வவுனியா பொலிசார் தெரிவித்துள்ளனர்.

காயமடைந்த மனைவி, வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

வவுனியா, சமயபுரம் பகுதியில் உள்ள வீடொன்றில் வசிக்கும் கணவனுக்கும் மனைவிக்கும் இடையே நேற்று வெள்ளிக்கிழமை இரவு தகராறு ஏற்பட்டுள்ளது. இந் நிலையில் மனைவி அருகில் உள்ள உறவினர் ஒருவரின் வீட்டிற்கு சென்றுள்ளார்.

இரவு 10 மணியளவில் மேற்படி வீட்டிற்கு சென்ற கணவன், மனைவியை வீட்டிற்கு வெளியே அழைத்துச் சென்று தடியால் தாக்கியதுடன், தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து மனைவி யின் முதுகு, கால் என்பவற்றின் மீது குத்தியுள்ளார்.

இதனால் காயமடைந்த மனைவி வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றார். இவ்வாறு காயமடைந்தவர் வவுனியா, சமயபுரத்தினைச் சேர்ந்த சங்கர் பார்வதி (வயது 29) என தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பாக வவுனியா பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதேவேளை, கணவன் தலைமறைவாகியுள்ளதாகவும் அவரை தாம் தேடி வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X