2025 ஜூலை 17, வியாழக்கிழமை

விபத்தில் ஐவர் காயம்

Suganthini Ratnam   / 2014 ஓகஸ்ட் 10 , மு.ப. 05:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நவரத்தினம் கபில்நாத்

வவுனியா, புதுக்குளம் பகுதியில் இடம்பெற்ற  வாகன விபத்தில் காயமடைந்த 05 பேர் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்தனர்.

மேற்படி  மோட்டார் சைக்கிள்; ஒன்றில்  சென்ற 04 பேர் மீது இராணுவ கென்டெய்னர் வாகனம் மோதியே இந்த விபத்து சம்பவித்ததாக தெரியவருகின்றது.

நேற்று சனிக்கிழமை (09) இரவு இடம்பெற்ற இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் சென்ற மருக்காரம்பளை வீதி மணிபுரத்தை சேர்ந்த ராஜன் குருபன் (வயது 23), எஸ்.கிசோகுமார் (வயது 21), த.நந்தகுமார் (வயது 24), ரா.ஜெனிசன் (வயது 20) ஆகியோருடன், இராணுவ வாகனச் சாரதியான பெரியகாடு இராணுவ முகாமைச் சேர்ந்த கோப்ரல் லக்மல் காயமடைந்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X