2025 ஜூலை 17, வியாழக்கிழமை

திவிநெகும திணைக்கள செயலமர்வு

Super User   / 2014 ஓகஸ்ட் 10 , மு.ப. 05:19 - 0     - {{hitsCtrl.values.hits}}


 -  ரஸீன் ரஸ்மின்


திவிநெகும திணைக்களம் மற்றும் முல்லைத்தீவு மாவட்டச் செயலகம் என்பனவற்றின் ஏற்பாட்டில் திவிநெகும திணைக்களத்தின் கீழ் பணிபுரியும் அரச உத்தியோகத்தர்கள், சமூக மட்டத் தலைவர்களுக்கான ஒருநாள் செயலமர்வொன்று  சனிக்கிழமை (09) கறைத்துறைப்பற்று பிரதேச செயலகத்தில் நடைபெற்றது.

முல்லைத்தீவு மாவட்ட செயலாளர் என்.வேதனாயகத்தின் தலமையில் இடம்பெற்ற நிகழ்வில் கைத்தொழில் மற்றும் வர்த்தகத்துறை அமைச்சரும், வன்னி மாவட்ட அபிவிருத்திக்குழுவின் தலைவருமான ரிஷாட் பதியுதீன், திவிநெகும திணைக்களத்தின் உதவி பணிப்பாளர் (பகுதி-6) ஆர்.எச்.டபிள்யூ.ஏ.குமாரசிறி, முன்னாள் பிரதேச செயலாளர் (மன்னார்) பி.விஸ்வலிங்கம். யாழ். பல்கலைக்கழகத்தின் முன்னாள் உபவேந்தர் பி.பாலசுந்தரம்பிள்ளை, முல்லைத்தீவு மாவட்ட திட்டப்பணிப்பாளரும் சமுர்த்தி உதவி ஆணையாளருமான பவானி கணேசமூர்த்தி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

இதன்போது முல்லைத்தீவு மாவட்டத்தின் கறைத்துறைப்பற்று, புதுக்குடியிருப்பு, ஒட்டுசுட்டான், மாந்தை கிழக்கு, துணுக்காய் ஆகிய பிரதேச செயலகத்தின் கீழ் பணிபுரியும் உதவி திட்டமிடல் பணிப்பாளர்கள், கணக்காளர்கள், சமுர்த்தி முகாமையாளர்கள், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியேபகத்தர்கள் ஆகியோருடன், சமுர்த்தி சங்கங்களின் தலைவர்கள் என 500 இற்கும் அதிகமானவர்கள் பங்குபற்றியிருந்தனர்.

இந்த செயலமர்வில் திவிநெகும அபிவிருத்தி திணைக்களத்தினால் முன்னெடுக்கப்படுகின்ற பணிகள் மற்றும் எதிர்காலத்தில் முன்னெடுக்கப்படவுள்ள அபிவிருத்தித் திட்டங்கள் பற்றி கலந்து கொண்ட உத்தியோகத்தர்களுக்கும், சமூக மட்டத் தலைவர்களுக்கும்  வளவாளர்களினால் விளக்கமளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X