2025 ஜூலை 17, வியாழக்கிழமை

மன்னார் உணவக உரிமையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

Menaka Mookandi   / 2014 ஓகஸ்ட் 13 , மு.ப. 08:22 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.றொசேரியன் லெம்பேட்


மன்னார் பஸார் பகுதியில் உள்ள உணவகங்களை சோதனையிட்ட மன்னார் சுகாதார பரிசோதர்கள் குழு, அப்பகுதியில் உள்ள 10 உணவக உரிமையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுத்துள்ளது.

இன்று புதன்கிழமை (13) காலை, மன்னார் பஸார் பகுதிகளில் உள்ள 15இற்கும் மேற்பட்ட உணவகங்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டன.

இதன்போது,  உணவகங்களின் உரிமையாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கு சுகாதாரம் தொடர்பான அறிவுரை வழங்கப்பட்டதோடு பாவனைக்கு உதவாத மற்றும் சுகாதாரத்திற்கு முறனான வகையில் கையாளப்பட்ட உணவுப்பொருட்கள் கைப்பற்றப்பட்டன.

சுகாதாரத்திற்கு முறனான வகையில் மற்றும் காலாவதியான உணவுப் பண்டங்களை வைத்திருந்த 10 உணவகங்களின் உரிமையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதோடு குறித்த உணவுப் பொருட்களும் மீட்கப்பட்டன.

குறித்த 10 உணவகங்களின் உரிமையாளர்களுக்கு எதிராக மன்னார் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்படவுள்ளதாக மன்னார் சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எஸ்.றோய் பீரிஸ் மேலும் தெரிவித்தார்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X