2025 ஜூலை 17, வியாழக்கிழமை

வீட்டினுள் அத்துமீறி நுழைந்த கடற்படைச் சிப்பாய்க்கு விளக்கமறியல்

Kogilavani   / 2014 ஓகஸ்ட் 14 , மு.ப. 03:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

- சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சி, வெற்றிலைக்கேணிப் பகுதியிலுள்ள வீடொன்றில் அத்துமீறி நுழைந்த கடற்படைச் சிப்பாய் ஒருவரை எதிர்வரும் 20 ஆம் திகதி வரையிலும் விளக்கமறியலில் வைக்குமாறு கிளிநொச்சி நீதவான் நீதிமன்ற எம்.ஐ.வகாப்தீன் புதன்கிழமை (13) உத்தரவிட்டார்.

மேற்படி நபர், வெற்றிலைக்கேணிப் பகுதியில் உள்ள வீடொன்றில் புதன்கிழமை (13) அதிலை அத்துமீறி நுழைய முற்பட்டபோது வீட்டுரிமையாளர்கள் சத்தமிட்டுள்ளனர்.

இதன்போது சந்தேகநபர் தப்பித்து ஓட முயன்ற வேளையில், ஊர்மக்கள் சந்தேகநபரை மடக்கிப் பிடித்து மருதங்கேணிப் உபபொலிஸ் நிலையப் பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.

இவரிடம் மேற்கொண்ட விசாரணையின்போது சந்தேகநபர் வெற்றிலைக்கேணி கடற்படை முகாமினைச் சேர்ந்த சிப்பாய் என்பது தெரியவந்தது.
தொடர்ந்து சந்தேகநபரை கிளிநொச்சி நீதிமன்றத்தில் பளைப் பொலிஸார் புதன்கிழமை (13) ஆஜர்ப்படுத்தினார்கள். இதன்போதெ நீதவான் இவ் உத்தரவினை பிறப்பித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X