2025 ஜூலை 17, வியாழக்கிழமை

முல்லைத்தீவில் நடமாடும் சேவை

Menaka Mookandi   / 2014 ஓகஸ்ட் 14 , மு.ப. 09:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட 19 கிராம அலுவலர் பிரிவுகளையும் உள்ளடக்கிய வகையில் நடமாடும் சேவை தேவிபுரம் பாடசாலையில் எதிர்வரும் சனிக்கிழமை (16) நடத்தப்படவுள்ளதாக புதுக்குடியிருப்பு பொலிஸார் வியாழக்கிழமை (14) தெரிவித்தனர்.

இந்த நடமாடும் சேவையில் ஒவ்வொரு கிராம அலுவலர் பிரிவுகளிலும் இருந்து தெரிவு செய்யப்பட்;ட தலா ஐந்து குடும்பங்களுக்கு தலா 500 ரூபா பெறுமதியான உலர் உணவுகள் வழங்கப்படவுள்ளன.

மேலும், பதிவு திருமணம் செய்யாதவர்களுக்கான பதிவு திருமணம் செய்தல், இலவச மருத்துவ வசதிகள் செய்தல், மற்றும் சட்ட ஆவணங்களைத் தவற விட்டவர்களுக்கு ஆவணங்களைப் பெற்றுக்கொடுப்பதற்கான சேவைகள் என்பனவும் இதன்போது இடம்பெறவுள்ளன.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X