2025 ஜூலை 17, வியாழக்கிழமை

வடமாகாண கூட்டுறவு அமைச்சின் பிரதி நிதிகளுக்கும் மன்னார் கூட்டுறவுச்சங்க பிரதி நிதிகளுக்கும் இடையில்

Menaka Mookandi   / 2014 ஓகஸ்ட் 29 , மு.ப. 11:11 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.றொசேரியன் லெம்பேட்


வடமாகாண கூட்டுறவு அமைச்சின் பிரதி நிதிகளுக்கும் மன்னார் மாவட்ட மீன்பிடி, கால்நடை, பனை, தென்னை கூட்டுறவுச் சங்கங்களுக்கும் இடையிலான விசேட சந்திப்பு ஒன்று, இன்று வெள்ளிக்கிழமை ந்(29) காலை மன்னார் மாவட்ட மீனவ கூட்டுறவுச் சங்கங்களின் சாமசத்தில் அதன் தலைவர் என்.எம்.ஆலம் தலைமையில் இடம் பெற்றது.

இதன்போது, வடமாகாண சபை உறுப்பினரும், வடமாகாண கூட்டுறவு அமைச்சின் விசேட பிரதிநிதியுமான சட்டத்தரணி எஸ்.சயந்தன், வடமாகாண கூட்டுறவுத் திணைக்கள பிரதம அலுவலகர் உதயன், மன்னார் மாவட்ட கூட்டுறவு உதவி ஆணையாளர் மங்கள தாசன் மற்றும் மாவட்டத்தின் மீனவ சங்கம், கால்நடை வளர்ப்போர் சங்கம் மற்றும் பனை தென்னை உற்பத்தியாளர் சங்கங்களின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டிருந்தனர்.

தற்போது மன்னார் மாவட்டத்தில் கூட்டுறவில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் தொடர்பாகவும் குறிப்பாக மன்னார் மாவட்டத்தில் உள்ள மீனவர்கள் தொடர்ச்சியாக எதிர்நோக்கி வரும் பிரச்சினைகள் தொடர்பாகவும் வடமாகாண கூட்டுறவு அமைச்சின் பிரதி நிதிகளுக்கு தெளிவுபடுத்தப்பட்டது.

இதன்போது, மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர்கள் இந்திய மீனவர்களினால் எதிர் நோக்கும் பிரச்சினைகள், மீனவர்களின் காப்புறுதியில் உள்ள சிக்கல்கள், மீனவர்களுக்கு வழங்கப்படும் பாதிப்பு நிவாரணங்களில் உள்ள பிரச்சினைகள் தொடர்பாகவும் வருகை தந்த பிரதி நிதிகளுக்கு மன்னார் மாவட்ட  மீனவ கூட்டுறவுச் சங்கங்களின் சாமசத்தலைவர் என்.எம்.ஆலம் தெழிவு படுத்தியமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X