2025 ஜூலை 17, வியாழக்கிழமை

மன்னாரில் தனிநாயகம் அடிகளார் நினைவு நிகழ்வு

Thipaan   / 2014 ஓகஸ்ட் 30 , மு.ப. 08:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

தமிழ்த்தூது தனிநாயகம் அடிகளார் இறையடி சேர்ந்த நினைவுதினமாகிய செப்டெம்பர் 1ஆம் திகதி திங்கட்கிழமை (01) காலை 10.00 மணிக்கு மன்னாரில் அடிகளாரின் நினைவு தின நிகழ்வுகள் இடம்பெற ஏற்பாடாகி உள்ளது.

மன்னார் பழைய நூல் நிலையத்துக்கு முன்னால் அமைக்கப்பட்டுள்ள தனிநாயகம் அடிகளாரின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தும் நிகழ்வும் அதைத்தொடர்ந்து அஞ்சலி உரைகளும் இடம்பெறவுள்ளது.

மன்னார் ஆயர் மேதகு இராயப்பு ஜோசேப்பு ஆண்டகை, இந்நிகழ்வில் முதன்மை விருந்தினராகக் கலந்துகொள்ளவுள்ளார்.  இந்நிகழ்வுக்கு மன்னார் தமிழ்ச் சங்கத்தின் உபதலைவர்  மஹாதேவ சர்மா தர்மகுமார குருக்கள் தலைமை தாங்குகிறார்.

தமிழ்ச் சங்கத்தின் சிரேஷ்ட உபதலைவர் ஜனாப் மக்கள் காதர் வரவேற்புரை நிகழ்த்தவுள்ளார்;. தமிழ்ச் சங்கத்தின் உதவிப் பொதுச் செயலாளர் திருமதி பெப்பி விக்ரர் லெம்பேட் சிறப்புரை ஆற்றவுள்ளதுடன் நிர்வாக உறுப்பினர் தே. பி. சிந்தாத்துரை நன்றியுரை ஆற்றவுள்ளார்.

தமிழ்ச் சங்கத் தலைவர் அருட் தமிழ் நேசன் அடிகளார் தலைமையில் இந்நிகழ்வுக்கான பூர்வாங்க ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. இந்நிகழ்வில் பங்கேற்றுச் சிறப்பிக்கும்படி மன்னார் தமிழ்ச் சங்கம் அனைவரையும் அழைக்கின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X