2025 ஜூலை 17, வியாழக்கிழமை

வவுனியா அரசாங்க அதிபருக்கு அச்சுறுத்தல்

Menaka Mookandi   / 2014 ஓகஸ்ட் 31 , மு.ப. 08:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

வவுனியா அரசாங்க அதிபர் பந்துல ஹரிச்சந்திரவுக்கு, காலி பிரதேசத்தில் வைத்து கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாக பொலிஸில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார்.

காலியில் உள்ள அவரது வீட்டுக்குச் சென்ற போது, அவரது வீட்டு வாசலை மறித்து நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ப்றாடோ ரக வாகனத்திலிருந்து இறங்கி வந்த சிறைச்சாலை அதிகாரிகள் இருவர், இந்த கொலை அச்சுறுத்தலை விடுத்துவிட்டுச் சென்றனர் என அவர் தனது முறைப்பாட்டில் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறு அச்சுறுத்தல் விடுத்த இருவரும் அரசாங்க அதிபரின் சகோதரர்கள் எனவும் இவர்களை கைது செய்த பொலிஸார், பிணையில் விடுவித்ததாகவும் காலி பொலிஸார் தெரிவித்தனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X