2025 ஜூலை 17, வியாழக்கிழமை

வவுனியா வறிய மாணவர்களுக்கு கற்றல் உபகரணம் அன்பளிப்பு

Gavitha   / 2014 ஓகஸ்ட் 31 , மு.ப. 09:06 - 0     - {{hitsCtrl.values.hits}}


-நவரத்தினம் கபில்நாத்


வவுனியாவில் வறிய மாணவர்களுக்கு சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் ம. ரமேஸின் வேண்டுகோளுக்கு இணங்க பாடசாலை உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

தமிழ் விருட்சம் சமூக ஆர்வலர்கள் அமைப்புக்கு சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் விடுத்த வேண்டுகோளுக்கிணங்க பட்டாணிச்சூர், பட்டகாடு, வேப்பங்குளம் கிராமங்களை சேர்ந்த வறிய குடும்பங்களை சேர்ந்த மாணவர்களுக்கு இளந்தளிர் கல்வி அறகட்டளை நிறுவனம் இந்த அன்பளிப்புகளை வழங்கியிருந்தது.

இந்நிகழ்வில் வவுனியா பிரதேசசெயலக கணக்காளர் ப.ஜெயபாஸ்கர், சமூர்த்தி தலைமை பீட முகாமையாளர் திருமதி சா.சந்திரகுமார், வேப்பங்குளம் சமூர்த்தி வங்கி சங்க முகாமையாளர் செல்வி ப.ஞானகி, பட்டாணிச்சி புளியங்குள சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் ம.ரமேஷ், முன்னாள் நகரசபை உறுப்பினரும் வணிக கைத்தொழில் அமைச்சின் வவுனியா மாவட்ட இணைப்பாளருமான அப்துல் பாரி, முன்னாள் நகரசபை உறுப்பினரும் நீதி அமைச்சின் வவுனியா மாவட்ட இணைப்பாளருமான எம். முனாபார், தெற்கு தமிழ் பிரதேசசபை உறுப்பினர் பா. ஜோர்ச், வேப்பங்குளம் வங்கி சங்கத்தலைவர் அ.அ. ஜருஸ் தமிழ் விருட்சம் சமூக ஆர்வலர்கள் அமைப்பின் சந்திரகுமார் கலைஞர் மாணிக்கம் ஜெகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X