2025 ஜூலை 17, வியாழக்கிழமை

கட்டாக்காலி மாடுகளின் உரிமையாளர்களுக்கு எதிராக நடவடிக்கை

Kanagaraj   / 2014 ஓகஸ்ட் 31 , பி.ப. 04:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரஸீன் ரஸ்மின்

முல்லைத்தீவு மாவட்டத்தில் பகல் மற்றும் இரவு நேரங்களில் கட்டாக்காலியாக சுற்றித்திரியும் மாடுகளை உரிய முறையில் கட்டி பராமறிக்குமாறும், மீறி கட்டாக்காலியாக சுற்றித்திரியும் மாடுகளின் உரிமையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் முல்லைத்தீவு மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகம் அறிவித்துள்ளது.

இந்த நடவடிக்கை நாளை திங்கட்கிழமை முதல் அமுலுக்கு வரவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள ஐந்து பொலிஸ் நிலையங்களுக்கு உட்பட்ட கிராமங்கள் மற்றும் பிரதான வீதிகளில் இவ்வாறு கட்டாக்காலி மாடுகளினால் பல விபத்துச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாகவும், இதனைக் கட்டுப்படுத்தும் நோக்கிலேயே இவ்வாறு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

பிரதான வீதிகள் மற்றும் குறுக்கு வீதிகள் என்பனவற்றில் மாடுகள் படுத்துறங்குவது, நிற்பது போன்றவற்றினால் பொதுமக்களும், வாகன சாரதிகளும் பல சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

கட்டாக்காலி மாடுகள் தொடர்பில் முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள ஐந்து பொலிஸ் நிலையங்கள் ஊடாக முல்லைத்தீவு மாவட்ட சிரேஷ்ட பொலீஸ் அத்தியட்சகர் அலுவலகத்திற்கு பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும் அந்த முறைப்பாடடின் அடிப்படையிலேயே இவ்வாறு நடவடிக்கை மேற்கொள்ள இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

கட்டாக்காலியாக சுற்றித்திரியும் மாடுகளை உரிய முறையில் கட்டிப் பராமறிக்காத அந்த மாடுகளின் உரிமையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படுவதுடன், பொலிஸாரினால் பிடிக்கப்படும் மாடுகளுக்கு உரிமை கோரப்படாத பட்சத்தில் குறித்த மாடுகள் நீதிமன்றத்திடம் ஒப்படைக்கப்பட்டு அரச உடமையாக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் முல்லைத்தீவு மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகம் விடுத்துள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, வீதியில் சுற்றித்திரியும் கட்டாக்காலி மாடுகளினால் ஏற்படும் பாதிப்புக்கள் குறித்து பொதுமக்கள் குறிப்பாக மாடுகளின் உரிமையாளர்கள் தெளிவுகளைப் பெறுவதுடன், தமது மாடுகளை உரிய முறையில் கட்டி வைத்து பராமறிக்குமாறும் முல்லைத்தீவு மாவட்ட சிரேஷ்ட பொலீஸ் அத்தியட்சகர் அலுவலகம் மேலும் கேட்டுள்ளது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X