2025 ஜூலை 17, வியாழக்கிழமை

தண்ணீருக்காக ஆர்ப்பாட்டம்

Suganthini Ratnam   / 2014 செப்டெம்பர் 01 , மு.ப. 04:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நவரத்தினம் கபில்நாத்

வரட்சியான இந்தக் காலத்தில் வவுனியா, தேக்கவத்தையில் உள்ள பொதுக்கிணறு ஒன்றிலிருந்து நீரைப் பெற்றுக்கொள்வதில் ஏற்பட்டுள்ள முரண்பாட்டுக்கு பொலிஸார் தீர்வை பெற்றுத்தரவில்லை எனக் கூறி நேற்று ஞாயிற்றுக்கிழமை (31) இரவு பொதுமக்கள் வீதியில் அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்தக் கிணற்றிலிருந்து பொலிஸ் உத்தியோகஸ்;தர் ஒருவர் தனது வீட்டுக்கு  நீர் இறைக்கும் இயந்திரத்தை  பயன்படுத்தி நீரைப் பெற்றுக்கொள்ளும் நிலையில், பொதுமக்கள் நீரைப் பெற்றுக்கொள்வதில் பாரிய பிரச்சினைகளை எதிர்நோக்கிவருகின்றனர். 

இது தொடர்பில் கிராம அலுவலகர் மற்றும் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டபோதிலும்,  இதுவரையில்  உரிய தீர்வை பெற்றுத்தரவில்லை என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.

இந்த நிலையில், ஆர்ப்பாட்ட இடத்துக்கு வந்து பொதுமக்களை பொலிஸார் சமரசம் செய்ய முயச்சித்தபோதிலும், பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தை கைவிடவில்லை. இதனைத் தொடர்ந்து இந்தப் பகுதியில் உள்ள  விகாரையின் தேரர் (விஹாராதிபதி) ஒருவர்  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் கலந்துரையாடிய நிலையில் ஆர்ப்பாட்டம் கைவிடப்பட்டது.

இது இவ்வாறிருக்க,  அண்மையில் பொதுமக்களின் நலன் கருதி முன்னாள் நகரசபை உறுப்பினர் லலித் ஜெயசேகரவின் வேண்டுகோளுக்கு இணங்க நகரசபையால் இந்தக் கிணறு ஆழப்படுத்தப்பட்டது.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X