2025 ஜூலை 17, வியாழக்கிழமை

பாலைமரக் குற்றிகளுடன் ஒருவர் கைது

Suganthini Ratnam   / 2014 செப்டெம்பர் 01 , மு.ப. 06:02 - 0     - {{hitsCtrl.values.hits}}


- சுப்பிரமணியம் பாஸ்கரன்


கிளிநொச்சி, புதுமுறிப்பு பகுதியிலிருந்து ஒரு  இலட்சம் ரூபாய் பெறுமதியான பாலைமரக் குற்றிகளை கப் ரக வாகனம் ஒன்றில் கொண்டுசென்றதாகக் கூறப்படும்  ஒருவரை ஞாயிற்றுக்கிழமை (31) இரவு கைதுசெய்ததாக கிளிநொச்சி வட்டார வனவளத்துறை அதிகாரி எஸ்.பிரபாகரன் திங்கட்கிழமை (01) தெரிவித்தார்.

கிளிநொச்சி வட்டார வனவளத்துறை அதிகாரி,   பூநகரி மற்றும் பளை வனவளத்துறை அதிகாரி எஸ்.தணிகாசலம்  மேற்கொண்ட சோதனையின்போது இது கண்டுபிடிக்கப்பட்டது.

பாலைமரக் குற்றிகளை கிளிநொச்சி நகருக்கு கொண்டுசெல்லும்போதே கண்டுபிடிக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.

இந்தச் சந்தேக நபருக்கு எதிராக கிளிநொச்சி நீதவான் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X