2025 ஜூலை 17, வியாழக்கிழமை

பாலை மரக்குற்றிகளை கடத்தியவருக்கு அபராதம்

Menaka Mookandi   / 2014 செப்டெம்பர் 01 , மு.ப. 07:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சி, புதுமுறிப்புப் பகுதியில் இருந்து 1 இலட்சம் ரூபாய் பெறுமதியான பாலை மரக்குற்றிகளை கப் ரக வாகனத்தில் கடத்திய நபருக்கு 20 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து கிளிநொச்சி நீதவான் நீதிமன்ற நீதவான் எம்.ஐ.வகாப்தீன் திங்கட்கிழமை (01) தீர்ப்பளித்தார்.

அத்துடன், மேற்படி நபரிடம் இருந்து மீட்கப்பட்ட பாலை மரக்குற்றிகளை அரச உடைமையாக்கும்படியும் நீதவான் கூறினார்.

கிளிநொச்சி வட்டார வனவளத்துறை அதிகாரி மற்றும் பூநகரி, பளை வனவளத்துறை அதிகாரி எஸ்.தணிகாசலம் ஆகியோர் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையில் மேற்படி கடத்தல் நடவடிக்கை ஞாயிற்றுக்கிழமை (31) இரவு பிடிக்கப்பட்டது.

கிளிநொச்சி நகர்ப் பகுதிக்குக் கடத்திக் கொண்டு செல்லும் போதே மேற்படி நபர் கைது செய்யப்பட்டார்.

தொடர்ந்து, மேற்படி நபருக்கு எதிராக கிளிநொச்சி நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பபட்டது.

மேற்படி வழக்கு திங்கட்கிழமை (01) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, குற்றவாளி தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார். இதனையடுத்து, நீதவான் அபராதம் விதித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X