2025 ஜூலை 17, வியாழக்கிழமை

உதவும் கரங்கள் கடன்திட்டம்

George   / 2014 செப்டெம்பர் 03 , மு.ப. 06:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வி.தபேந்திரன்

பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் நிதியுதவியில் வாழ்வின் எழுச்சி அபிவிருத்தித் திணைக்களத்தால் மேற்கொள்ளப்பட்ட, உதவும் கரங்கள் கடன்திட்டத்தின் மூலமாக கிளிநொச்சி மாவட்டத்தில் 1.35 மில்லியன் ரூபாய் பெறுமதியான கடன்கள் வழங்கப்பட்டுள்ளதாக, வாழ்வின் எழுச்சி அபிவிருத்தி திணைக்களத்தின் கிளிநொச்சி மாவட்ட பணிப்பாளர் பி.ரி.எம்.இர்பான் புதன்கிழமை (03) தெரிவித்தார்.

கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள 4 பிரதேச செயலக பிரிவுகளிலும் உள்ள, 7 வாழ்வின் எழுச்சி சமுதாய அடிப்படை வங்கிகள் மூலமாக இக்கொடுப்பனவுகள் வழங்கப்பட்டுள்ளன.

அந்த வகையில் 50 ஆயிரம் ரூபாய் கடன் தொகையை 10 பயனாளிகள் பெற்றுக்கொண்டுள்ளனர்.

அத்துடன், 5000 ரூபாய் கடனை 170 பேர் பெற்றுக்கொண்டுள்ளனர். அதாவது, கிளிநகர் 15, வட்டக்கச்சி 44, ஸ்கந்தபுரம் 60, கண்டாவளை 15, பளை 17, பூநகரி 10, ஜெயபுரம் 09 என்ற ரீதியில் 170 பயனாளிகளுக்கு இந்த கடன்கள் வழங்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

மேற்படி கடன்கள் கடந்த திங்கட்கிழமை (01) இடம்பெற்ற திட்ட அங்குரார்ப்பண நிகழ்வின் போது, வழங்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் கூறினார்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X