2025 ஜூலை 17, வியாழக்கிழமை

சிறாட்டிக்குளம் கிராமத்துக்கான போக்குவரத்து சேவை ஆரம்பம்

Menaka Mookandi   / 2014 செப்டெம்பர் 03 , மு.ப. 07:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

முல்லைத்தீவு, மாந்தை கிழக்கு பிரதேசத்திற்குள் அமைந்துள்ள சிறாட்டிகுளம் கிராமத்துக்கான போக்குவரத்து சேவை, இன்று புதன்கிழமை (03) முதல் ஆரம்பமாகவுள்ளதாக மாந்தை கிழக்கு பிரதேச செயலாளர் ரி.பிருந்தாகரன்; புதன்கிழமை (03) தெரிவித்தார்.

முல்லைத்தீவு மாவட்டத்தின் மாந்தை கிழக்;கு பிரதேச செயலாளர் பிரிவின் கீழுள்ள சிறாட்டிகுளம் கிராமத்தில் 54 குடும்பங்களைச் சேர்ந்த 180 இற்கும் மேற்பட்டவர்கள் வசித்து வருகின்றனர்.

இப்பகுதி மக்கள், தமக்கான தேவைகளை நிறைவேற்றுவதற்கு 7 கிலோமீற்றர் தூரம் வரையில் செல்லவேண்டிய தேவை இருப்பதுடன், அதற்கு எவ்வித போக்குவரத்து வசதிகளும் தங்களுக்கு இல்லையெனவும் தெரிவித்திருந்தனர்.

மேலும், இக்கிராமத்திலுள்ள பாடசாலை தரம் 1 தொடக்கம் 5 வரையான வகுப்புகளை மாத்திரம் கொண்டு இயங்குவதனால், ஏனைய உயர் வகுப்புக்களில் கல்வி கற்கும் மாணவர்கள் 10 கிலோமீற்றருக்கு அப்பால் உள்ள பாடசாலைக்குச் சென்று கல்வி கற்கவேண்டிய தேவை காணப்படுகின்றதாகவும் போக்குவரத்து வசதி இல்லாமையால் மாணவர்கள் பெரும் அவஸ்தைப்படுவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

இவ்விடயம் தொடர்பில் பிரதேச செயலாளர் கருத்துத் தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

செயலாளர் மேலும் தெரிவிக்கையில், 

அண்மையில் இடம்பெற்ற பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தில் இவ்விடயம் தொடர்பில் கலந்துரையாடியிருந்தோம்.

இதன்போது, வவுனியாவிலிருந்து பாலமோட்டை, நவ்வி,  குஞ்சுக்குளம் ஊடாக மூன்றுமுறிப்பு வரை தினமும் சேவையில் ஈடுபடும் அரச பேருந்தை சிறாட்டிக்குளம் வரையில் சேவையில் ஈடுபடுவதற்கான ஏற்பாடுகள் செய்வதாக ஒருங்கிணைப்புக் குழுத்தலைவர் முனைஸ் பாரூக் ஒப்புதலளித்தார்.

அதன்படி, மேற்படி பகுதிக்கான பேருந்து சேவைகள் புதன்கிழமை (03) முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X