2025 ஜூலை 17, வியாழக்கிழமை

மூன்று முறிப்பு பொதுநோக்கு மண்டம் புனரமைப்பு

George   / 2014 செப்டெம்பர் 03 , மு.ப. 09:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

முல்லைத்தீவு மாவட்டம் மாந்தை கிழக்குப் பிரதேசத்திற்குட்பட்ட மூன்று முறிப்பு பொதுநோக்கு மண்டபம், யு.என்.எச்.சி.ஆர். நிறுவனத்தின் 1.1 மில்லியன் ரூபாய் நிதியுதவியில் புனரமைக்கப்பட்டு வருவதாக பிரதேச செயலாளர் புதன்கிழமை (03) தெரிவித்தார்.

நியாப் திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட மேற்படி பொதுநோக்கு மண்டபம் கடந்த காலத்தில் இடம்பெற்ற யுத்தத்தால் சேதமடைந்து காணப்பட்டது.

இந்நிலையில், மேற்படி மண்டபத்தைப் புனரமைத்துத் தரும்படி அப்பகுதி மக்கள் கோரிக்கை முன்வைத்திருந்தனர்.

அந்தக் கோரிக்கைக்கு அமைய யு.என்.எச்.சி.ஆர் நிறுவனத்தின் நிதியுதவியுடன் இந்தப் பொதுநோக்கு மண்டபம் தற்போது புனரமைக்கப்படடு வருவதாக அவர் மேலும் கூறினார். 

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X