2025 ஜூலை 17, வியாழக்கிழமை

நீர் வெறுப்பு நோயை கட்டுப்படுத்த நாய்களுக்கு தடுப்பூசி

Gavitha   / 2014 செப்டெம்பர் 03 , மு.ப. 11:25 - 0     - {{hitsCtrl.values.hits}}


-நவரத்தினம் கபில்நாத்


வவுனியா மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள கடும் வரட்சி காரணமாக நாய்களுக்கு நீர் வெறுப்பு நோய் ஏற்படாமல் பாதுகாப்பதற்காக தடுப்பூசி ஏற்றும் செயற்பாட்டை சுகாதார திணைக்களம் முன்னெடுத்து வருகின்றது.

வவுனியாவின் பல பகுதிகளிலும் மேற்கொள்ளப்பட்டு வரும் இச்செயற்பாட்டில் வீட்டு வளர்ப்பு நாய்களுக்கு முதற்கட்டமாக இத்தடுப்பூசிகள் ஏற்றப்பட்டு வருகின்றது.

இதன் ஒரு கட்டமாக வவுனியா வடக்கில் இன்று புதன்கிழமை (3)  நாய்களுக்கான தடுப்பூசிகள் ஏற்றபட்டிருந்தது.

அடுத்த கட்டமாக வீதியோர நாய்களுக்கும் இத்தடுப்பூசியை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் சுகாதார திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X