2025 ஜூலை 17, வியாழக்கிழமை

வரட்சியால் விவசாயம், மீன்பிடி பாதிப்பு

Menaka Mookandi   / 2014 செப்டெம்பர் 04 , மு.ப. 05:24 - 0     - {{hitsCtrl.values.hits}}


-சுப்பிரமணியம் பாஸ்கரன், எம்.றொசாந்த்


வடமாகாணத்தில் நிலவி வரும் வறட்சியான காலநிலையால், வடமாகாணத்தின் முக்கிய பொருளாதாரங்களான விவசாயம் மற்றும் மீன்பிடி ஆகியன கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக வடமாகாண விவசாய அமைச்சர் பொன்னுத்துரை ஐங்கரநேசன் புதன்கிழமை (03) தெரிவித்தார்.

கிளிநொச்சி மாவட்ட விவசாயிகளுக்கு இழைய வளர்ப்பு முறையில் உருவாக்கப்பட்ட வாழைக்குட்டிகள் மற்றும் நீர் இறைக்கும் இயந்திரங்கள் வழங்கும் நிகழ்வு கிளிநொச்சி விவசாயப் பணிமனையில் புதன்கிழமை (03) இடம்பெற்றது.

இதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் கூறுகையில்,

வரட்சியால் மக்களின் வாழ்வாதாரமும் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளது. நன்னீர் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டவர்கள் தங்களின் தொழிலை இழந்த நிலையில் இருக்கின்றார்கள்.

எமது பிரதேச விவசாயிகள் பாரம்பரிய விவசாய முறைகளுடன் புதிய தொழில்நுட்பங்களை இணைத்து உபயோகப்படுத்தி விவசாயத்தை வெற்றிகரமாக மேற்கொள்ளவேண்டும்.

அதன் மூலம் அதிக இலாபம் சம்பாதித்து தங்கள் வாழ்வாதாரத்தை விவசாயிகள் வளப்படுத்திக்கொள்ள வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.

மேற்படி நிகழ்வில் 10 விவசாயிகளுக்கு இழைய வளர்ப்பு முறையில் வளர்க்கப்பட்ட வாழைக்குட்டிகள் மற்றும் 10 நீர் இறைக்கும் இயந்திரங்கள் என்பன வழங்கப்பட்டன. இவை வடமாகாண விவசாய அமைச்சின் நிதியுதவியில் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X