2025 ஜூலை 17, வியாழக்கிழமை

குளத்தில் மூழ்கி உயிரிழந்த சிறுமிகளின் குடும்பங்களுக்கு கொடுப்பனவு

Menaka Mookandi   / 2014 செப்டெம்பர் 04 , மு.ப. 08:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வி.தபேந்திரன்

கிளிநொச்சி, கந்தன்குளத்தில் மூழ்கி உயிரிழந்த மூன்று சிறுமிகளின் மரணச் சடங்குக்காக அனர்த்த முகாமைத்துவ அமைச்சினால் தலா 15 ஆயிரம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என கிளிநொச்சி மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பணிப்பாளர் க.சுகுணதாஸ் வியாழக்கிழமை (04) தெரிவித்தார்.

கடந்த சனிக்கிழமை (30) கந்தன்குளத்தில் குளிக்கச் சென்ற, கிளிநொச்சி செல்வநகரைச் சேர்;ந்த சரவணபவன் நவதாரணி (வயது 16), சரவணபவன் தாட்சாயிணி (வயது 08), கணேஸ் துஷாந்தினி (வயது 16) ஆகிய மூன்று சிறுமிகளும் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.

இந்நிலையில், நாடாளுமன்ற உறுப்பினர் முருகேசு சந்திரகுமார், கிளிநொச்சி மாவட்ட செயலாளர் திருமதி ரூபவதி கேதீஸ்வரன் ஆகியோரின் வழிகாட்டலில் மேற்படி சிறுமிகளின் மரணச் சடங்கைச் செய்வதற்கான உதவித் தொகை சமூக சேவை அமைச்சிலிருந்து பெற்று வழங்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

அனர்த்தங்களில் மரணமடைவோருக்கான கொடுப்பனவுகள் அனர்த்த முகாமைத்துவத்தால் வழங்கப்பட்டு வரும் நியதிக்கமையவே இந்த நிதிகள் வழங்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X