2025 ஜூலை 16, புதன்கிழமை

கசிப்பு உற்பத்தி செய்த மூவர் கைது

Menaka Mookandi   / 2014 செப்டெம்பர் 08 , மு.ப. 06:51 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ரஸீன் ரஸ்மின்


முல்லைத்தீவு, முள்ளியவளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மதவாளசிங்கன்குளம் பிரதேச காட்டுப்பகுதியில் கசிப்பு உற்பத்தியை மேற்கொண்ட சந்தேகநபர்கள் மூவரை கைது செய்துள்ள பொலிஸார், விசாரணைகளின் பின்னர் அவர்களை பிணையில் விடுவித்துள்ளனர்.

தமக்கு கிடைத்த இரகசியத் தகவல் ஒன்றில் அடிப்படையில் குறித்த பிரதேசத்தில் சனிக்கிழமை (06) இரவு சுற்றிவளைப்பொன்றினை மேற்கொண்ட போது, குறித்த மூவரும் கைது செய்யப்பட்டுள்ளதுடன், கசிப்பு உற்பத்தி செய்யப்பட்ட இடத்திலிருந்து மூன்று பெறல் கசிப்பையும் கைப்பற்றியதாக பொலிஸார் கூறினர்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட மூவரும் ஞாயிற்றுக்கிழமை பிணையில் விடுதலை செய்யப்பட்டதுடன், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X