2025 ஜூலை 16, புதன்கிழமை

பாரம்பரியங்களும், கற்கைகளும் கல்லூரிகளின் மதிப்பு: சி.வி

Kogilavani   / 2014 செப்டெம்பர் 09 , மு.ப. 04:40 - 0     - {{hitsCtrl.values.hits}}


-சுப்பிரமணியம் பாஸ்கரன்


கல்லூரிகளின் பாரம்பரியமும் அங்கு இருக்கின்ற கற்கைநெறிகளுமே அக்கல்லூரிகளின் மதிப்பு என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

கிளிநொச்சி முருகானந்தா கல்லூரியின் 75வது ஆண்டு பவளவிழா திங்கட்கிழமை (08) இடம்பெற்றது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில்

'கல்லூரி ஒன்று தங்கியிருப்பது அதன் கட்டடங்களில் அல்ல. அதில் கல்வி கற்ற, கற்கும் மாணவ மாணவியரின் கருத்தில்தான் அது பதிந்து இருக்கின்றது.

அங்கு கற்பித்த, கற்பிக்கும் ஆசிரியர்களின் கடமையுணர்ச்சி, கல்லூரியிலிருந்து வெளிவந்த மாணவ, மாணவியர் எவ்வாறு சமூகத்தில் கணிக்கப்படுகின்றார்கள், பெற்றோர்கள் கல்லூரிக்கு கொடுக்கும் மதிப்பு ஆகியவற்றில் மதிப்பு தங்கியுள்ளது.

மேலும், கற்றாரும் மற்றாரும் கல்லூரியின் பாரம்பரியங்களுக்கும், கற்கைநெறிகளுக்கும் அளிக்கும் மதிப்பு இதில் முக்கியமானது' என அவர் மேலும் தெரிவித்தார்.

இந்நிகழ்வில், முருகானந்தா கல்லூரியின் பவள விழா ஞாபகார்த்தமாக பழைய மாணவர்கள் ஒன்றிணைந்து கட்டிய ஞாபகார்த்த மண்டபம் திறந்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் வடமாகாண கல்வி அமைச்சர் தம்பிராசா குருகுலராஜா, நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X