2025 ஜூலை 16, புதன்கிழமை

கொள்ளை கோஷ்டி கைது

Menaka Mookandi   / 2014 செப்டெம்பர் 12 , மு.ப. 05:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் இடம்பெற்ற கொள்ளை சம்பவங்களுடன்  தொடர்புடைய ஐந்து சந்தேகநபர்களை கொண்ட கொள்ளையர் குழுவொன்றை வியாழக்கிழமை (11) கைது செய்ததாக கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்தனர்.

மேற்படி சந்தேகநபர்களிடமிருந்து முச்சக்கரவண்டியொன்றும், மூன்று மோட்டார் சைக்கிள்கள், தங்கக்கட்டிகள், சைக்கிள்கள், கோடரிகள் என்பனவும் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் கூறினர்.

கிளிநொச்சி, பரந்தன் பகுதியில் கடந்த வாரம் வீடொன்று உடைக்கப்பட்டு அங்கிருந்த 5 இலட்சம் ரூபா பெறுமதியான நகைகள் மற்றும் பணம் ஆகியன கொள்ளையடிக்கப்பட்டிருந்தது.

இந்த கொள்ளைச் சம்பவம் தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு, அந்த கொள்ளை சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என ஐந்து சந்தேகநபர்கள், வியாழக்கிழமை (11) கிளிநொச்சி பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டனர்.

தொடர்ந்து சந்தேகநபர்களிடம் மேற்கொண்ட விசாரணைகளில், புதுக்குடியிருப்பில் 4 கொள்ளை சம்பவங்களுடனும், மாங்குளம், பூநகரி, கிளிநொச்சி ஆகிய பகுதிகளில் இடம்பெற்ற தலா ஒவ்வொரு கொள்ளைச் சம்பவங்களுடனும் இவர்களுக்கு தொடர்புகள் இருப்பது தெரியவந்தது.

மேற்படி நபர்களை இன்று வெள்ளிக்கிழமை (12) நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தவுள்ளதாக பொலிஸார் மேலும் கூறினார்கள்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X