2025 ஜூலை 16, புதன்கிழமை

முசலியில் தேசிய டெங்கு ஒழிப்பு திட்டம்

Menaka Mookandi   / 2014 செப்டெம்பர் 12 , மு.ப. 05:58 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.றொசேரியன் லெம்பேட்


தேசிய டெங்கு ஒழிப்பு வார நிகழ்வுகள் நேற்று வியாழக்கிழமை (11), முசலி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் முசலி வைத்திய அதிகாரி எம்.ஏ.ஒஸ்மன் சாள்ஸ் தலைமையில் இடம்பெற்றது.

இதன்போது, முசலி பிரதேச செயலாளர் பிரிவுகளில் உள்ள அலுவலகங்கள் மற்றும் வீடுகள் சுகாதார அதிகாரிகள் குழுவினரினால் பரிசோதனை செய்யப்பட்டது.

இதன் போது வீடுகள், மதஸ்தளங்கள், பாடசாலைகள், படை முகாம்கள் ஆகியவற்றில் டெங்கு ஒழிப்பு சிரமதானப் பணிகளும் இடம்பெற்றன.

குறித்த ஒவ்வெறு இடங்களுக்கும் முசலி வைத்திய அதிகாரி எம்.ஏ.ஒஸ்மன் சாள்ஸ் தலைமையிலான குழுவினர் நேரடியாகச் சென்று சோதனைகளை மேற்கொண்டனர்.

சோதனை நடவடிக்கைகளின் போது நுளம்பு பெருகும் இடங்கள் அடையாளம் காணப்பட்ட நிலையில் அவ்விடங்களில் நுளம்புகள் பெருகாத வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X