2025 ஜூலை 16, புதன்கிழமை

சிறுவர் பாதுகாப்பு முறையை நெறிப்படுத்தும் செயற்றிட்ட கருத்தரங்கு

Kanagaraj   / 2014 செப்டெம்பர் 18 , பி.ப. 02:00 - 0     - {{hitsCtrl.values.hits}}


நவரத்தினம் கபில்நாத்


வட மாகாணத்தில் சிறுவர் பாதுகாப்பு முறையினை நெறிப்படுத்தும் செயற்றிட்டம் தொடர்பான கருத்தரங்கு இன்று (18) வவுனியா பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது.

அண்மைக்காலமாக வட மாகாணத்தில் அதிகரித்து வரும் சிறுவர் துஸ்பிரயோக செயற்பாடுகளை கட்டுப்படுத்துவதற்கான முதற்கட்ட வேலைத்திட்டமாக மேற்கொள்ளப்படும் இக் கருத்தரங்கினை வவுனியா மாவட்டத்தில் சிறுவர்களுடன் பணியாற்றும் அரச உத்தியோத்தகர்கள், கிராம சேவகர்கள், அரசசார்பற்ற நிறுவன பிரதிநிதிகளுக்கு தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை ஏற்பாடு செய்திருந்தது.

வவுனியா பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற இக் கருத்தரங்கில் சட்டவைத்திய அதிகாரி வைத்தியகலாநிதி சிவரூபன் மற்றும் சட்டத்தரணிகள் கலந்து கொண்டு கருத்துரைகளை வழங்கியிருந்தனர்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X