Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 14, திங்கட்கிழமை
Menaka Mookandi / 2015 ஜனவரி 30 , மு.ப. 09:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.றொசேரியன் லெம்பேட்
'முப்பது வருடத்தில் நாம் இழந்தது அதிகம். இனிமேலும் எக்காரணம் கொண்டும் கல்வியை நாம் இழந்து விடக்கூடாது அதுவே நம்மோடு வரும் அழியா சொத்து' என வடமாகாண அமைச்சர் பா.டெனிஸ்வரன் தெரிவித்தார்.
மன்னார், நானாட்டான் மகா வித்தியாலய வருடாந்த இல்ல விளையாட்டு விழா நேற்று(29) வியாழக்கிழமை பாடசாலை மைதானத்தில் பாடசாலையின் அதிபர் அருட் சகோதரர் ரெஜினோல்ட் தலைமையில் இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், 'முப்பது வருடத்தில் நாம் இழந்து நிற்பவை அதிகம் ஆனால் இனியும் நாம் அழியாத சொத்தான கல்வியை எக்காரணம் கொண்டும் இழந்துவிட முடியாது என்பதை அனைத்து மாணவர்களும் உணர்ந்து கல்வியையும் விளையாட்டையும் தொடர்ந்திட வேண்டும்.
அதிபரின் வேண்டுகோளுக்கிணங்க இந்த பாடசாலைக்கு துவிச்சக்கரவண்டி நிறுத்துமிடம் ஒன்றை இவ்வருடம் அமைத்து தருவேன். நானாட்டானில் இருந்து முருங்கன் செல்லுகின்ற வீதி புனரமைப்பதற்கான நிதியும் ஒதுக்கப்பட்டு விட்டது. இஎதிர்வரும் ஏப்ரல் மாதமளவில் வேலைகள் ஆரம்பிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
குறித்த நிகழ்விற்கு சிறப்பு விருந்தினர்களாக வடக்கு மாகாண சபையின் மன்னார் மாவட்ட உறுப்பினர்களான சட்டத்தரணி எஸ்.பிரிமுஸ் சிராய்வா, வைத்திய கலாநிதி டாக்டர் ஞ.குணசீலன் மற்றும் விசேட விருந்தினராக சமூக சேவையாளர் சார்ள்ஸ் நிர்மலநாதன் ஆகியோரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
8 hours ago
9 hours ago
9 hours ago