2025 ஜூலை 14, திங்கட்கிழமை

வவுனியாவில் டெங்கு அழிப்பு நடவடிக்கை

Princiya Dixci   / 2015 பெப்ரவரி 02 , பி.ப. 01:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நவரத்தினம் கபில்நாத்

வவுனியா நகர்ப்பகுதியில் டெங்கு நுளம்பு பெருகும் இடமென அடையாளம் காணப்பட்ட பகுதிகளில், திங்கட்கிழமை (02) விசேட வேலைத்திட்டமொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.

வவுனியா நகரசபை. விசேட அதிரடிப்படை, பொலிஸார் இணைந்து மேற்கொண்ட இப்பணியில் வவுனியா நகர்ப்பகுதியில் அமைந்துள்ள வடிகான்களுக்கள் துப்பரவு செய்யப்பட்டன.

நடைபாதை வியாபாரிகள் பயன்படுத்தும் பொலித்தீன்கள் வடிகான்களுக்குள் தேங்குவதனாலேயே நுளம்பு பெருக்கம் ஏற்பட்டுள்ளதாக வவுனியா நகரசபை சுகாதாரப் பிரிவு உத்தியோகஸ்தர்கள் தெரிவித்தனர்.

இதன்போது, வடிகான்களை மூடி அமைக்கப்பட்ட சீமெந்து கற்களும் அகற்றப்பட்டு வடிகான்கள் துப்பரவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .