2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

மரக்கடத்தலில் ஈடுபட்ட 9பேர் கைது

Menaka Mookandi   / 2015 பெப்ரவரி 03 , மு.ப. 07:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நவரத்தினம் கபில்நாத்

வவுனியா, விளாகத்திக்குளத்தில் மரக்கடத்தலில் ஈடுபட்ட 9பேர் விஷேட அதிரடிப்படையினரால் நேற்று திங்கட்கிழமை (02) கைது செய்யப்பட்டு மடு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

விளாத்திக்குளம், புதுவெளிக்குளம் காட்டுப்பகுதியில் மரக்கடத்தல் இடம்பெறுவதாக விஷேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் நடத்தப்பட்ட தேடுதலின்போதே வெட்டி வீழ்த்தப்பட்ட 90க்கும் அதிகமான மரங்களும் அதற்காக பயன்படுத்தப்பட்ட கருவிகளும் மீட்கப்பட்டுள்ளன.

இதனையடுத்து மரக்கடத்தலில் ஈடுபட்டார்கள் என்ற சந்தேகத்தில் அப்பிரதேச காடுகளில் நின்ற 9பேர் கைது செய்யப்பட்டு மடு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .