2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

கிளிநொச்சி கல்வி வலயத்துக்கு 137 ஆசிரியர்கள் நியமனம்

Princiya Dixci   / 2015 பெப்ரவரி 06 , மு.ப. 05:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நடராசா கிருஸ்ணகுமார்

கிளிநொச்சி கல்வி வலயத்துக்கு 137 ஆசிரியர்கள் பிறமாவட்டங்களிலிருந்து நியமிக்கப்பட்டுள்ளதாக கிளிநொச்சி வலயக் கல்விப் பணிப்பாளர் கந்தசாமி முருகவேல் வியாழக்கிழமை (05) தெரிவித்தார்.

இவ் ஆசிரியர்களில் 30 பேர் வியாழக்கிழமை (05) பணிகளைப் பொறுப்பேற்றுள்ளனர்.

அத்துடன், வருகை தரவுள்ள ஆசிரியர்களின் பாட ரீதியான விபரங்களைப் பெற்று, கிளிநொச்சி மேற்கு வன்னேரிக்குளம் மகா வித்தியாலயம், ஜெயபுரம் மகா வித்தியாலயம் மற்றும் கிராஞ்சி அ.த.க.பாடசாலை போன்ற ஆசிரிய நெருக்கடி நிலவுகின்ற பாடசாலைகளுக்கு இவர்கள் நியமிக்கப்படவுள்ளதாக வலயக் கல்விப் பணிப்பாளர் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .