2025 ஜூலை 14, திங்கட்கிழமை

தெற்கை மையப்படுத்தியே புதிய அரசு வேலை: சிவசக்தி ஆனந்தன்

Menaka Mookandi   / 2015 பெப்ரவரி 08 , மு.ப. 06:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த்

புதிய அரசாங்கத்தின் வேலைத்திட்டங்கள் தெற்கை மையமாக வைத்தே மேற்கொள்ளப்பட்டு வருவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் குற்றஞ்சாட்டினார்.

காணாமற்போனோரின் உறவுகளால் முல்லைத்தீவு மாவட்டச் செயலகத்தில் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு ஊடகவியலாளர்களுக்கு கருத்துக்கூறுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

அவர் தொடர்ந்து கூறுகையில், 'புதிய அரசாங்கத்தின் 100 நாள் வேலைத்திட்டத்தில் வடக்கில் எதுவித நலன்களும் மேற்கொள்ளப்படவில்லை' என்றார்.  

காணாமற்போனோரின் பெயர் பட்டியல் வெளியிடுதல், காணாமற்போனோரை விடுதலை செய்தல், தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்தல், இராணுவத்தினரிடம் ஒப்படைத்தோரை விடுதலை செய்தல் ஆகிய நடவடிக்கைகளை புதிய அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும். இந்த விடயங்களை தனது 100 நாள் வேலைத்திட்டத்தில் அரசாங்கம் உள்ளடக்க வேண்டும் என்று அவர் மேலும் கூறினார்.

அங்கு உரையாற்றிய வடமாகாண விவசாய அமைச்சர் பொன்னுத்துரை ஐங்கரநேசன், ”முன்னை அரசாங்கத்தின் மீது இருந்த வெறுப்பின் காரணமாக தமிழ் மக்கள் மாற்றத்துக்கு வாக்களித்தமையை புதிய அரசாங்கம் புரிந்துகொள்ள வேண்டும்" என்றார்.

"காணமற்போனோர் தொடர்பான பெயர் பட்டியல் வெளியிடப்படவேண்டும். இராணுவத்தினரின் ஒப்படைக்கப்பட்டவர்கள், கைது செய்யப்பட்டவர்கள், முன்னாள் போராளிகள், அரசியல் கைதிகள் ஆகியோர் விடுவிக்கப்படவேண்டும்.

இதில் சட்டச் சிக்கல் இருக்கு என்று ஏமாற்று கதைகள் கூறவேண்டாம். சரத் பொன்சேகாவுக்கு எவ்வாறு சகல உரிமைகளும் மீளப்பெற்றுக்கொடுக்கப்பட்டதோ அதேபோல இவர்களும் விடுதலை செய்யப்படவேண்டும்.

சனிக்கிழமை (07) யாழ்ப்பாணம் விஜயம் மேற்கொண்ட பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்தன, வடக்கிலிருந்து இராணுவத்தினர் அகற்றப்படமாட்டார்கள் மற்றும் அங்கவீனமடைந்த, காயமடைந்த இராணுவத்தினர்களுக்கு உதவி செய்யவுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

தமிழ் மக்கள் இதற்காக வாக்களிக்கவில்லை. தங்கள், வீடுகள், காணிகள், மற்றும் பண்ணை நிலங்களிலிருந்து இராணுவத்தினர் வெளியேற்றப்படவேண்டும் எனக்கோரியே புதிய அரசாங்கத்துக்கு வாக்களித்தனர். அங்கவீனமடைந்த, காயமடைந்த இராணுவத்தினருக்கு உதவி செய்வது போல, யுத்தத்தால் பாதிக்கப்பட்ட முன்னாள் போராளிகளுக்கும் இந்த அரசாங்கம் உதவிகள் செய்யவேண்டும்.

காணாமற்போன வாகனங்களை கண்டறியுமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உத்தரவுட்டுள்ளார். வாகனங்களுக்கு உத்தரவிட்டவர், ஏன் காணாமற் போனவர்களை கண்டறிய உத்தரவிடவில்லை.காணாமற்போனோர் தொடர்பான பிரச்சினையை 100 நாள் வேலைத்திட்டத்தில் மேற்கொள்ள வேண்டும்" என அவர் மேலும் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .