Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 14, திங்கட்கிழமை
Menaka Mookandi / 2015 பெப்ரவரி 09 , மு.ப. 05:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
-நடராசா கிருஸ்ணகுமார்
கிளிநொச்சி, அக்கராயன் பகுதியில் மேம்பாலம் ஒன்றை அமைப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாக கிளிநொச்சி மாவட்ட பிரதி நீர்ப்பாசனப் பணிப்பாளர் என்.சுதாகரன் திங்கட்கிழமை (09) தெரிவித்தார்.
அக்கராயன் குளத்திலிருந்து வான் பாயும் போது, திருமுருகண்டிலிருந்து வன்னேரிக்குளம் செல்லும் வீதியை ஊடறுத்து வெள்ளநீர் பாய்வதால், அக்கராயன் மத்திய பகுதிக்கும் அக்கராயன் கிழக்குப் பகுதிக்குமான போக்குவரத்து துண்டிக்கப்படுவதுடன், அக்கராயன் பிரதேச மருத்துவமனையின் வாகனத்தின் மூலம் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லமுடியாதநிலை உள்ளது.
அக்கராயன் குளத்திலிருந்து குறைந்தது 1 வாரத்துக்கு வான் பாய்வதால் மக்களின் போக்குவரத்து முற்றாக இல்லாமல் போகின்றது. இதனால் இதற்கு நடவடிக்கை எடுத்து வான்வெள்ளம் பாய்கின்ற இடத்தில் மேம்பாலம் ஒன்றினை அமைத்துத்தருமாறு மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
இது தொடர்பில் கருத்து தெரிவித்த நீர்ப்பாசன பொறியிலாளார், 'அக்கராயன் குளத்தின் வான்வெள்ளம் 600 அடி நீள வான் வழியாகவே வெளியேறுகின்றது. 25 அடி நீளமான தாழ்வான வீதியில் அமைந்துள்ள இந்த பாலத்தின் ஊடாக விரைவாக நீர் வெளியேற முடியாததன் காரணமாக வீதியை மூடி வெள்ளம் பாய்கின்றது.
அந்த இடத்தில் மேம்பாலம் அமைப்பதன் மூலம் போக்குவரத்து தடைநீங்கும். வீதி அபிவிருத்தித் திணைக்களத்துடன் கலந்தாலோசித்து பாலம் அமைப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
8 hours ago
9 hours ago
9 hours ago