Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 14, திங்கட்கிழமை
Gavitha / 2015 பெப்ரவரி 10 , மு.ப. 10:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
-நவரத்தினம் கபில்நாத்
மேலைத்தேய மோகத்தில் இருந்து விடுபட்டு தமிழர்களின் பாரம்பரிய வாத்தியங்களால் பொது நிகழ்வுகளை சிறப்பிக்க வேண்டும் என்று வட மாகாண சுகாதார அமைச்சர் ப. சத்தியலிங்கம் தெரிவித்தார்.
வடக்கு மாகாண சுகாதார அமைச்சரினால் ஒதுக்கப்பட்ட நிதியிலிருந்து வவுனியா சைவப்பிரகாச மகளிர் கல்லூரிக்கு இன்னிய (பாரம்பரிய இசைக்கருவிகள்) உபகரணங்கள் திங்கட்கிழமை (09) வழங்கி வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, தெரிவிக்கும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
இன்று நம்மில் பலர் எமது பாரம்பரிய கலையை மறந்து ஆங்கிலேய கலாசாரத்தில் மோகம் கொண்டுள்ளோம். இதனால் தான் பாண்ட் வாத்தியங்களில் கவனத்தை செலுத்தியுள்ளோம்.
எமது மொழி, கலாசாரம் மிகத்தொன்மை வாய்ந்தது. இனிவரும் காலங்களில் இவ்வாறான இன்னிய வாத்தியங்களை இசைத்து பொது நிகழ்வுகளை நடாத்த வேண்டும். இதன் மூலம் எமது கலைகளை பாதுகாத்துக் கொள்ளமுடியும் என தெரிவித்தார்.
இதன்போது தமிழரின் பாரம்பரிய கலையை பிரதிபலிக்கும் உடுக்கை, தவில், நாதஸ்வரம், பறை, புல்லாங்குழல், கொம்பு போன்ற உபகரணங்கள் அமைச்சரினால் பாடசாலை அதிபரிடம் வழங்கி வைக்கப்பட்டது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
15 minute ago
1 hours ago
2 hours ago