2021 ஜூன் 20, ஞாயிற்றுக்கிழமை

ஐ.தே.க வேட்பாளர்களுடன் அமைச்சர் ஜோசப் மைக்கல் பெரேரா சந்திப்பு

Menaka Mookandi   / 2015 பெப்ரவரி 11 , மு.ப. 05:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரஸீன் ரஸ்மின்

எதிர்வரும் 28ஆம் திகதி நடைபெறவுள்ள கரைத்துறைப்பற்று மற்றும் புதுக்குடியிருப்பு ஆகிய பிரதேச சபைத் தேர்தலில் ஐ.தே.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை உள்நாட்டலுவல்கள் மற்றும் கடற்தொழில் அமைச்சர் ஜோசப் மைக்கல் பெரேரா நேற்று செவ்வாய்க்கிழமை சந்தித்துக் கலந்துரையாடினார்.

முல்லைத்தீவு மாவட்டச் செயலகத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் முல்லைத்தீவு மாவட்ட இணைப்பாளர் முஹம்மது ரிசாம் தலைமையில் இந்த சந்திப்பு இடம்பெற்றது.

இதன்போது நடைபெறவுள்ள குறித்த இரு பிரதேச சபைகளின் தேர்தலிலும் ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் உறுப்பினர்களை பெறுவதற்கான வியூகங்கள் மற்றும் வாக்குகளை எவ்வாறு பெற்றுக்கொள்வது உள்ளிட்ட பல விடயங்கள் குறித்து ஆராயப்பட்டுள்ளன.

அத்துடன், தேர்தல் தொடர்பில் வேட்பாளர்களுக்கு அமைச்சர் ஆலோசனைகளை வழங்கியுள்ளதாகவும்  ஐக்கிய தேசியக் கட்சியின் முல்லதை;தீவு மாவட்ட இணைப்பாளர் முஹம்மது ரிசாம் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .