2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

'கிளிநொச்சி விவசாயிகளுக்காக எவருமே எதுவும் செய்யவில்லை'

Menaka Mookandi   / 2015 பெப்ரவரி 13 , மு.ப. 04:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த்

கிளிநொச்சி மாவட்ட விவசாயிகளின் நலன் காப்பது தொடர்பில் கிளிநொச்சியிலுள்ள விவசாயம் சார் அதிகாரிகளோ அல்லது வடமாகாண விவசாய அமைச்சோ எதுவித நலன்களையும் செய்யவில்லை என இரணைமடு விவசாய சம்மேளனத் தலைவர் செல்லையா சிவப்பிரகாசம் தெரிவித்தார்.

யாழ். ஊடக அமையத்தில் வியாழக்கிழமை (12) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு கூறினார்.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், 'மைத்திரிபால சிறிசேன அரசாங்கம் நெல் மூடையொன்று 3500 ரூபாய் என்ற அடிப்படையில் கொள்வனவு செய்யப்படவேண்டும் எனக்கூறியது. ஆனால் பாவப்பட்ட கிளிநொச்சி விவசாயிகளிடமிருந்து 1,800 ரூபாய் என்ற விலையிலேயே ஒரு மூடை நெல்லை கொள்வனவாளர்கள் கொள்முதல் செய்கின்றனர். இதனால் விவசாயிகள் பெரும் நட்டமடைகின்றனர். இது தொடர்பில் அக்கறை எடுப்பதற்கு யாரும் இல்லை.

இவ்வாறு எமக்கான விவசாய முன்னேற்றகரமான நடவடிக்கைகளை எவரும் மேற்கொள்ளாதுவிடின் எதிர்காலத்தில் இதனைக் கண்டித்து மாபெரும் போராட்டம் ஒன்றை நாங்கள் மேற்கொள்ளவேண்டி வரும்' என்றார்.  

'வடக்கில் வசந்தம் திட்டத்தின் கீழு; கிளிநொச்சி மாவட்ட கமநல சேவைகள் திணைக்களத்தக்கு வழங்கப்பட்ட 15 உழவு இயந்திரங்களில், 2 உழவு இயந்திரங்களின் கலப்பை களவு போய்விட்டதாகக் கூறுகின்றனர்.

இது நியாயமில்லாத ஒரு கருத்து. ஒரு கலப்பையை தூக்குவது 20 பேர் தேவை. களவு போவதற்கு சந்தர்ப்பம் இல்லை. ஒவ்வொன்றும் தலா 3 இலட்சத்து 85 ஆயிரம் ரூபாய் பெறுமதியுடையவை. அவர்கள் அவற்றை விற்பனை செய்துவிட்டு களவு போய்விட்டது என்று கூறுகின்றனர்.

இதுவரை காலமும் எங்களுடன் இணைந்து பணியாற்றி வந்த இரணைமடு நீர்ப்பாசன பொறியியலாளரை எதிர்வரும் 23அஆம் திகதி இடமாற்றம் செய்யவிருப்பதாக அறிவித்தல் வந்துள்ளது.

அவரை மாற்றவேண்டாம் அல்லது எதிர்வரும் சிறுபோகம் வரையில் அவரை மாற்றவேண்டாம் ஆகிய கோரிக்கைகளை விவசாய திணைக்களம், விவசாய அமைச்சு உள்ளிட்ட பலதரப்பினரிடம் முன்வைத்து அவர்கள் அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை.

கிளிநொச்சி மாவட்டத்தில் மீள்குடியேற்றம் ஆரம்பிக்கப்பட்ட பின்னர், 2010ஆம் ஆண்டு முதல் அவர் எங்களுடன் இணைந்து எங்கள் நலன் சார்பாக பணியாற்றியவர். அவரை இடமாற்றம் செய்வதற்கு நாங்கள் விரும்பவில்லை.

5 வருடம் ஒருவர் கடமையாற்றினால் இடமாற்றம் செய்யப்படு;ம் என நீர்ப்பாசன திணைக்கள உயர் அதிகாரிகள் கூறினார். ஆனால் அங்கு பலர் 10 வருடங்களாகவும் ஒரே இடத்தில் கடமையாற்றி வருகின்;றனர்.

இந்த பொறியியலாளர் உயர் அதிகாரிகளுடன் சிலவேளைகளில் இணங்கிச் செல்லாமல் விவசாயிகளின் நலனுக்காக செயற்பட்டமையால் அவரை இடமாற்றம் செய்கின்றார்களோ? என நாங்கள் சந்தேகிக்கின்றோம்' என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .