Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை
Menaka Mookandi / 2015 பெப்ரவரி 13 , மு.ப. 06:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ரஸீன் ரஸ்மின்
முல்லைத்தீவு மாவட்டத்துக்குட்பட்ட கரைத்துறைப்பற்று மற்றும் புதுக்குடியிருப்பு ஆகிய இரு பிரதேச சபைகளுக்கான தேர்தலில் 11 வேட்பாளர்கள், தாம் தேர்தலில் போட்டியிடவில்லை என எழுத்து மூலம் அறிவித்துள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட உதவி தேர்தல் ஆணையாளர் ஆர்.சசீலன் இன்று (12) தெரிவித்தார்.
கடந்த 2012ஆம் ஆண்டு நடைபெற இருந்த குறித்த தேர்தலானது இம்மாதம் நடைபெறவுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் கரைத்துறைப்பற்று பிரதேச சபைக்கு ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு சார்பில் போட்டியிட இருந்த 10 வேட்பாளர்களும், புதுக்குடியிருப்பு பிரதேச சபைக்கு அதே கட்சியில் போட்டியிட இருந்த ஒருவருமான மொத்தம் 11 வேட்பாளர்கள் தாங்கள் இந்த தேர்தலில் போட்டியிடவில்லை என எழுத்து மூலமாக எமக்கு அனுப்பியிருந்தனர்.
அவர்கள் அனுப்பிய கடிதம் தேர்தல் அணையாளருக்கு அனுப்பி வைக்ப்பட்டது. எனினும் அவர்களின் அந்த வாபஸ் பெறும் கடிதத்தை ஏற்பதற்கு சட்டத்தில் இடமில்லை என்பதால் தேர்தல் ஆணையாளர் அக்கடிதத்தை ஏற்பதற்கு மறுத்து விட்டார் என்றார்.
நடைபெறவுள்ள கரைத்துறைப்பற்று மற்றும் புதுக்குடியிருப்பு ஆகிய இரு பிரதேச சபைகளுக்கு 20 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கு 162 வேட்பாளர்கள் போட்டியிடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
3 hours ago
3 hours ago