2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

மீனவர்களின் பிரச்சனைகள் அடங்கிய 5 அம்சக்கோரிக்கைகள் புதிய அரசாங்கத்திடம் முன்வைக்கப்பட்டுள்ளது

Sudharshini   / 2015 பெப்ரவரி 14 , மு.ப. 05:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நவரத்தினம் கபில்நாத்


புதிய அரசாங்கத்திடம், மீனவர்களின் பிரச்சனைகள் தொடர்பாக 5 அம்சக்கோரிக்கையை தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கம் சனிக்கிழமை (13) முன்வைத்துள்ளது.

 

வவுனியா அருந்ததி மண்டபத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே இக்கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.


இது குறித்து மீனவர் ஒத்துழைப்பு சங்கம் கருத்து தெரிவிக்கையில்,


இந்திய மீனவர்களின் ஆக்கிரமிப்பினால் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்கான தீர்வை பெற்றுக்கொள்வதற்கான சிறந்த சந்தர்ப்பமாக ஜனாதிபதி மற்றும் இந்திய பிரதமரின் சந்திப்பு அமைய இருப்பதாகவும், இச்சந்தர்ப்பத்தில் தம்மால் முன்வைக்கப்படுகின்ற ஆலோசனைகளை ஜனாதிபதி கவனத்தில் கொள்ளவேண்டும்.


வலி வடக்கு, முள்ளிக்குளம், பள்ளிமுனை, சம்பூர் போன்ற அனைத்து இடம்பெயர்ந்த மீனவ மக்களின் பிரச்சனைகளுக்கும் விரைவில் தீர்வு பெற்றுத்தர வேண்டும். மேலும், யுத்தத்தில் அதிகமாகப் பாதிக்கப்பட்ட குடும்பத்தலைமைத்துவப் பெண்கள் மற்றும் பிள்ளைகளின் மீள்குடியேற்றம், பாதுகாகப்பு மற்றும் வாழ்வாதாரம் போன்ற நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும்.


அரசியல் மற்றும் இராணுவ ஒத்துழைப்புடன் தெற்கு மீனவர்களினால் வடபுலத்தில் அசாதாரணமாக மேற்கொள்ளப்படடு வரும் ஆக்கிரமிப்புக்கள் மற்றும்  வடபுல மீனவர்கள் எதிர்க்கொள்ளும் பாதிப்புக்கள் உடனடியாக தீர்வு காணவேண்டும்.


டைனமைட் உட்பட சகலவிதமான சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளையும் தடைசெய்வதுக்கு நடவடிக்கை எடுக்கவேண்டும். சகலவிதமான மக்கள் பிரச்சினைகளையும் தீர்ப்பதற்கான தேசிய செயற்பாட்டுக்கொள்ளை, தேசிய மீன்பிடிக்கொள்கை, போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டு அரசாங்கம் 100 நாட்கள் வேலைத்திட்டத்துக்குள் சமமாக செயற்படவேண்டும் என்றும் தமது கேரிக்கைகளை முன்வைத்தனர்.


இச்சந்திப்பில் கலந்துகொண்ட தேசிய தேசிய மீனவ ஒத்துழைப்பு  இயக்கத்தின் வடக்கு கிழக்கு இணைப்பாளர் அன்ரன் ஜேசுதாஸ் தெரிவிக்கையில்,


இலங்கை மீனவர்களின் பிரச்சினைகளுக்கு கடந்த அரசாங்கமும் தீர்வு தரவில்லை.. இந்த அரசாங்கம் இதற்கு தீர்வு தராவிட்டால் நாங்களும் எங்களுடைய ரோலர் இலுவைப்படகுகளையும் பயன்படுத்துவோம்.


இன்னொருவர் எங்கள் கடல் வளத்தை அழிக்கின்ற போது நாங்கள் பார்த்துக்கொண்டு இருக்கமுடியாது. மீனவப்பிரச்சனைகளை முரண்பாடாக மாற்றாமலிருக்க, புதிய அரசாங்கத்தில் நம்பிக்கை வைத்துளோம். அந்த நம்பிக்கைக்காக செயற்படவேண்டும் என  அவர் தெரிவித்தார்.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .