Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 14, திங்கட்கிழமை
Sudharshini / 2015 பெப்ரவரி 14 , மு.ப. 09:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஆர்.ரஸ்மின்
கரைத்துறைப்பற்று பிரதேச சபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பில் போட்டியிடப் போவதில்லையென எழுத்து மூலம் தேர்தல் ஆணையாளருக்கு அறிவித்துள்ளதாக வடமாகாண சபையின் பிரதி அவைத்தலைவர் அன்ரனி ஜெகநாதன் வெள்ளிக்கிழமை (13) தெரிவித்தார்.
இது தொடர்ப்பில் அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,
கடந்த 2012ஆம் ஆண்டு நடைபெறவிருந்த கரைத்துறைப்பற்று பிரதேச சபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு சார்பில் முதன்மை வேட்பாளராக களமிறங்கினேன்.
எனினும், எதிர்பாராத வகையில் தேர்தல் நடைபெறாமல் போனது. அதன்பின்னர் கடந்த 2013ஆம் ஆண்டு நடைபெற்ற வடமாகாண சபைத் தேர்தலில் போட்டியிட்டு மாகாண சபை உறுப்பினராகவும் தெரிவு செய்யப்பட்டுள்ளேன்.
இவ்வாறு மாகாண சபை உறுப்பினராக செயற்பட்டுவரும் நிலையில், தற்போது பழைய வேட்புமனுத் தாக்கலின் அடிப்படையில் மீண்டும் கரைத்துறைப்பற்று தேர்தல் நடைபெறவுள்ளதால் இம்மாதம் முதற்பகுதியிலேயே தேர்தலில் போட்டியிடவில்லை என தேர்தல் ஆணையாளருக்கு எழுத்து மூலம் அறிவித்துள்ளேன்.
குறித்த தேர்தலில் போட்டியிட வேண்டும் என்றால் மாகாண சபை உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்ய வேண்டும் எனவும் அதுதொடர்பில் 13ஆம் திகதிக்கு முன் பதில் அனுப்பி வைக்குமாறு தேர்தல் ஆணையாளரிடமிருந்து கடிதமொன்று வந்தது.
எனினும் குறித்த கடிதம் கிடைப்பதுக்கு முன்னரே நான் இந்த தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என அறிவித்து விட்டேன்.
அத்துடன், கரைத்துறைப்பற்று பிரதேச சபைத் தேர்தலில் த.தே.கூ. சார்பில் போட்டியிட இருந்த இரு வேட்பாளர்கள் தற்போது வெளிநாடு சென்றுள்ளனர். ஆகவே, போட்டியிடுவதுக்கு களமிறங்கிய 15 வேட்பாளர்களில் என்னுடன் மூவர் போட்டியிடப்போவதில்லை. இதில் 12 வேட்பாளர்களே போட்டியிடவுள்ளனர்.
இத்தேர்தலில் எமது கட்சியின் சார்பில் கரைத்துறைப்பற்று பிரதேச சபைக்கு 10 உறுப்பினர்களை பெற்றுக்கொள்ள முடியும் என்ற நம்பிக்கையிருக்கிறது என அவர் மேலும் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
6 hours ago
6 hours ago
6 hours ago