2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

குளவிக்கொட்டுக்கு இலக்காகி 3 பேர் வைத்தியசாலையில்

Gavitha   / 2015 பெப்ரவரி 14 , மு.ப. 11:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நவரத்தினம் கபில்நாத்

வவனியா நெளுக்களம் கலைமகள் மகாவித்தியாலயத்தின் கட்டடத்தில் இருந்து இன்று (14) குளவி கொட்டியில் அதிபர் உட்பட மூவர் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இப்பாடசாலையின் இல்ல மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டிகள் இன்று மதியம் 2 மணிக்கு இடம்பெறவிருந்த நிலையில், மைதான ஒழுங்குகளில் ஈடுபட்டிருந்த அதிபர் உட்பட ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் மீது பாடசாலை கட்டடத்தில் இருந்த குளவி தாக்கியுள்ளது.

இதன் காரணமாக பல ஆசிரியாகள் மாணவர்கள் குளிவியின் தாக்கத்துக்கு உள்ளாகியபோதிலும் அதிபர் உட்பட உப அதிபர், மாணவியொருவரும் கடுமையாக பாதிக்கப்பட்ட நிலையில் வவுனியா பொது வைத்தயிசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

எனினும் பாடசாலை அதிபர் சிகிச்சை பெற்று வெளியேறிய நிலையில் மற்றைய இருவரும் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .