2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

முச்சக்கர வண்டி விபத்து: ஐவர் படுகாயம்

Sudharshini   / 2015 பெப்ரவரி 14 , பி.ப. 12:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரஸீன் ரஸ்மின்


முல்லைத்தீவு, மாங்குளம் பிரதான வீதியின் நீராவிப்பிட்டி பிரதேசத்தில் முச்சக்கர வண்டியொன்று விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த பாடசாலை மாணவிகள் நால்வர் உட்பட முச்சக்க வண்டியின் சாரதியும் படுகாயமடைந்த நிலையில் மாஞ்சோலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என முள்ளியவளை பொலிஸார் தெரிவித்தனர்.


மேற்படி நான்கு மாணவிகளும் பாடசாலைக்கு நேற்று வெள்ளிக்கிழமை (13) சென்றுக்கொண்டிருந்த போதே இவ்விபத்து சம்பவித்துள்ளது.


குறித்த முச்சக்கர வண்டிக்கு பின்னால் வந்துக்கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் முச்சக்கர வண்டியின் மீது மோதுண்டதையடுத்து, முச்சக்கர வண்டி வீதியோரம் குடைசாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.


சிகிச்சைகளின் பின்னர் மூன்று மாணவிகள் வீடு திரும்பியுள்ளதாகவும் முச்சக்கர வண்டியின் சாரதியும் மற்றொரு மணவியுமே வைத்தியசாலையில் தற்போது சிகிச்சை பெற்று வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.


இச்சம்பவம் தொடர்பில் முள்ளியவளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .