2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

விஞ்ஞான ஆசிரியரை நியமிக்குமாறு கோரிக்கை

George   / 2015 பெப்ரவரி 15 , மு.ப. 09:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன் 

கிளிநொச்சி முருகானந்தா கல்லூரியில் விஞ்ஞான ஆசிரியர் இல்லாமை காரணமாக மாணவர்களின் கற்றல் செயற்பாடுகளை மேற்கொள்ள முடியாதுள்ளதாக பாடசாலையின் பெற்றோர் சங்கம் தெரிவித்துள்ளது.

தரம் 6 தொடக்கம் 11 வரையான வகுப்புக்களில் கல்வி கற்பிப்பதற்கு 3 விஞ்ஞான ஆசிரியர்கள் தேவையான நிலையில், ஒருவர் மட்டுமே கடமையாற்றி வந்தார். எனினும் மாகாண கல்வி அமைச்சின் இடமாற்றத்துக்கமைய இவருடம் இடமாற்றிச் செல்கின்றார்.

இதனால், விஞ்ஞான பாடத்துக்கு ஆசிரியர் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. பௌதீக வளப்பற்றாக்குறையுடன் இயங்கும் இக்கல்லூரியின் ஆளணி வளத்தையும் நிறைவு செய்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறு வலயக்கல்வி, மற்றும் மாகாண கல்வி திணைக்களம் ஆகியவற்றிடம் கோரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளதாக சங்கம் மேலும் தெரிவித்தது.

இது பற்றி மாகண கல்வி திணைக்களத்திடம் கேட்டபோது, விஞ்ஞான பட்டதாரி ஆசிரியர்களுக்கான ஆட்சேர்ப்பு நடைபெறவுள்ளது, அவர்கள் இணைத்துக் கொள்ளப்பட்ட பின்னர் விஞ்ஞான ஆசிரியர்கள் பற்றாக்குறையான பாடசாலைகளுக்கு அவர்கள் அனுப்ப வைக்கப்படுவார்கள் என திணைக்களம் கூறியது. 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .