2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

கள்ளுத் தவறணையை இடமாற்றக் கோரி மனு

Menaka Mookandi   / 2015 பெப்ரவரி 16 , மு.ப. 04:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நடராசா கிருஸ்ணகுமார்

முல்லைத்தீவு, துணுக்காய், ஐயன்கன்குளம் பகுதியில் அமைந்துள்ள கள்ளுத் தவறணையை ஒதுக்குப் புறமான இடத்துக்கு மாற்றுமாறு கோரி அப்பகுதி பொதுமக்களால், கிளிநொச்சி மாவட்டச் செலயாளர் திருமதி ரூபவதி கேதீஸ்வரனிடம் நேற்று திங்கட்கிழமை (16) மனுவொன்று கையளிக்கப்பட்டது.

அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

ஐயன்கன்குளம் அ.த.க.பாடசாலை, ஐயன்கன்குளம் மருத்துவமனை, பொலிஸ் நிலையம் மற்றும் வர்த்தக நிலையங்கள் அமைந்துள்ள பகுதியில் கள்ளுத் தவறணை இருப்பதன் காரணமாக வன்முறைகள் மிகுந்த இடமாக அப்பகுதி சூழல் விளங்குகின்றது.

அதனால், மக்கள் செறிவாக வாழ்கின்ற பகுதியிலிருந்து அந்த தவறணையை அகற்றி ஒதுக்குப்புறமான இடத்தில் இயங்க வைப்பதற்கான நடவடிக்கையை இரு வாரங்களுக்குள் மேற்கொள்ளவும், இல்லாதுவிடின் அதற்கு எதிராக போராட்டம் மேற்கொள்வதற்கு தீர்மானித்துள்ளதாகவும் அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த மனுவின் பிரதிகள், துணுக்காய் பிரதேச செயலாளர், முல்லைத்தீவு மாவட்ட பனை -  தென்னை வள அபிவிருத்திச் சங்கம் மற்றும் ஐயன்கன்குளம் பொலிஸார் ஆகியோருக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .