Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 14, திங்கட்கிழமை
Menaka Mookandi / 2015 பெப்ரவரி 17 , மு.ப. 07:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
-நடராசா கிருஸ்ணகுமார்
முல்லைத்தீவு, துணுக்காய் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள 3 கிராமங்களுக்கு அக்ரெட் நிறுவனத்தின் உதவியுடன் பல்வேறுபட்ட விசேட பயிற்சிகள் வழங்கப்பட்டு வருவதாக உயிலங்குளம் கிராம அபிவிருத்திச் சங்கத் தலைவர் என்.ஸ்ரீகாந்தன் செவ்வாய்க்கிழமை (17) தெரிவித்தார்.
உயிலங்குளம், தென்னியங்குளம், கோட்டைக்கட்டியகுளம் ஆகிய 3 கிராமங்களைச் சேர்ந்த மக்களுக்கு தலைமைத்துவப் பண்புகள், உளவளம், சுகாதார விழிப்புணர்வு, எயிட்ஸ், மாற்றாற்றல் திறன் அபிவிருத்தி, முன்பள்ளி மற்றும் மாணவர்களுக்கான மகிழ்வூட்டல் உள்ளிட்ட பயிற்சிகள் முன்னெடுக்கப்படுகின்றன.
கடந்த டிசம்பர் மாதம் தொடக்கம் நடைபெற்று வரும் இந்தப் பயிற்சிகளில், துணுக்காய் பிரதேச செயலர் சி.குணபாலன் மற்றும் உளவள உத்தியோகத்தர்கள் ஆகியோர் வளவாளர்களாக செயற்பட்டு வருகின்றனர் என அவர் கூறினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
43 minute ago
6 hours ago
6 hours ago
6 hours ago