Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை
Princiya Dixci / 2015 பெப்ரவரி 20 , மு.ப. 05:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.றொசேரியன் லெம்பேட்
நந்திக்கடலில் தற்போது அதிகளவில் இறால் பிடிபடும் காலம் ஆகையால் வட்டுவாகல் நந்திக்கடல் பகுதியில் இரவு வேளைகளில் தடை செய்யப்பட்ட வலைகளைப் பயன்படுத்தி இறால் பிடிப்பவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என வட மாகாண மீன்பிடி அமைச்சர் பா.டெனிஸ்வரன் தெரிவித்தார்.
தடைசெய்யப்பட்ட தங்கூசி வலை, கூட்டு வலை, படுப்பு வலைகளைப் பயன்படுத்தி இறால்; மற்றும் மீன்பிடியில் ஈடுபடுவதாக அங்குள்ள மக்கள் வட மாகாண மீன்பிடி அமைச்சர் பா.டெனிஸ்வரனுக்கு முறைப்பாடு செய்துள்ளனர்.
இவ்விடயம் குறித்து கவனத்திற்கொண்டு தடை செய்யப்பட்ட தொழில் முறைகளை கையாண்டு எமது கடல் வளத்தை சுரண்டுகின்ற எவருக்கும் இடமளிக்காது உடன் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளுமாறு முல்லைத்தீவு மாவட்ட அதிகாரிகளுக்கு அமைச்சர் பணித்துள்ளார்.
ஒரு சிலரது சுயநலத்துக்காக எமது கடல் வளத்தை அழிக்க முடியாது எனவும் சட்டத்தின் முன் யாவரும் ஒருவரே எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
2 hours ago
3 hours ago