2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் தீ விபத்து

Suganthini Ratnam   / 2015 பெப்ரவரி 20 , மு.ப. 06:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

- நடராசா கிருஸ்ணகுமார்

முல்லைத்தீவு மாவட்ட செயலக கட்டடத்தொகுதியில் வியாழக்கிழமை (19) இரவு பரவிய தீயை, பொலிஸார் மற்றும் பொதுமக்களின் ஒத்துழைப்புடன் கட்டுப்பாட்டினுள் கொண்டுவந்ததாக மாவட்டச் செயலாளர் நாகலிங்கம் வேதநாயகன் தெரிவித்தார்.

மாவட்ட செயலக வளாகத்திலுள்ள பழைய கட்டடத்தொகுதியின் ஒருபகுதியில் தீ பரவியது.  அக்கட்டடத்திலிருந்த ஆவணங்கள் மற்றும் அலுவலர்களின் கோவைகள் புதிய கட்டடத்தொகுதிக்கு மாற்றப்பட்டிருந்தன. தீ ஏற்பட்ட பகுதியில் முக்கிய ஆவணங்கள் ஒன்றும் இருக்கவில்லை. பழைய தளபாடங்கள் இருந்திருக்கலாம் என்றும் அவர் கூறினார்.

இந்த தீ விபத்து தொடர்பாக முல்லைத்தீவு பொலிஸார் மேற்கொண்டுவரும் நிலையில், மின்னொழுக்கு காரணமாக தீ பரவியதாக  ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவருகின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .